நிழற்படம் இல்லை
கந்தசாமி.அ. ந:

பெயர்: அ. ந. கந்தசாமி
பிறந்த இடம்: வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் (8.8.1924 – 2.14.1968)
புனைபெயர்கள்: கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு


படைப்புகள்:

நாவல்கள்:

  • மனக்கண்
  • மதமாற்றம்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • வெற்றியின் ரகசியங்கள்

மொழிபெயர்ப்பு:

  • நாநா – எமிலி சோலாவின் நாவல்

இவர்பற்றி:

  • தனது பதினான்கு வயதிலேயே எழுதத் தொடங்கியவர். முதலில் ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுதினார். அப்போது ஈழகேசரி நடத்திய கதைப்போட்டியில் முதல்பரிசு பெற்றுள்ளார். மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்திற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர். ஏனையவர்கள் தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். தேசாபிமானி, சுதந்திரன் வீரகேசரி பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். முற்போக்கு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்திலும் பேச்சிலும் வல்லவர். இவரது மதமாற்றம் நாடகம் பலமுறை மேடையேறி பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. கடவுள் என் சோர நாயகன், துறவியும் கு\;;டரோகியும், சிந்தனையும் மின்னொளியும், எதிர்காலச் சித்தன் பாடல், வில்லூன்றி மயானம் போன்ற இவரது கவிதைகள் புகழ்பெற்றவை. நள்ளிரவு, இரத்த உறவு, ஐந்தாவது சந்திப்பு, பாதாள மோகினி போன்ற தரமான சிறுகதைகள் உட்பட கிட்டத்தட்ட நாற்பது வரையிலான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  • ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் இடதுசாரிச் சிந்தனையினை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் அ.ந.கந்தசாமி.  'எதிர்காலச் சித்தனின் பாடல்', சிந்தனையும் மின்னொளியும், கடவுள் என் சோர நாயகன், வில்லூன்றி மயானம், துறவியும் குஸ்டரோகியும் போன்றவை இவரது முக்கியமான கவிதைகளில் குறிப்பிடத்தக்கன. ஆங்கில வார இதழான டிரிபியூனிலும், இலங்கை அரசின் தகவற் துறை வெளியிட்ட ஸ்ரீலங்கா இதழிலும் அ.ந.க ஆசிரியராகப் பணியாற்றினார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.